சேப்பங்கிழங்கு தோல் துவையல் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: சேப்பங்கிழங்கு தோல் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4,

உளுத்தம் பருப்பு, புளி மற்றும் கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

வேக வைத்த சேப்பங்கிழங்கை உரித்து தோல் மட்டும் தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன் அதை போட்டு நன்றாக வதக்கவும்.

பின், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை சேர்த்து வதக்கி ஆறியவுடன் நைசாக அரைக்கவும்.

அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், இப்போது சேப்பங்கிழங்கு தோல் துவையல் ரெடி.

சத்தான இந்த துவையலை சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.