வெயிலுக்கு இதமாக நுங்கு ரோஸ்மில்க்

6 இளம் நுங்கை சுத்தம் செய்து சிறிது பால் சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 1 லி., பாலை நன்றாகக் காய்ச்சி பாதியாக வற்ற விடவும்.

அதில், இனிப்புக்கு தேவையானளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி ஆற விடவும்.

பின், அரைத்த நுங்கு கலவையுடன், 1 டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

இதை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தால், கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான நுங்கு ரோஸ்மில்க் இப்போது ரெடி.

சிறிய துண்டுகளாக நறுக்கிய நுங்கை சேர்த்தும் குடிக்கலாம்.