தீபாவளி கங்கா ஸ்நானம்... சிறப்பு ரயில் யாத்திரை
தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், 'கங்கா ஸ்நானம்' சிறப்பு ரயில் யாத்திரையை, ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 28ம் தேதி புறப்படும், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை, தீபாவளியன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்யலாம்.
பின் பிரயாக்ராஜ், கயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக செல்லும், 'சேது சூப்பர் பாஸ்ட்' விரைவு ரயிலில், இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதேபோல், நேபாளத்தில் உள்ள முக்திநாத், வாராஹி, பிந்துவாஷி கோவில்கள், மகேஷ்வர் குகை, டேவீஸ் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் வழியாக செல்லும் ராமேஸ்வரம் - அயோத்தி விரைவு ரயிலில், நவ., 11ல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தில் இருந்து 'ஏசி' பஸ்சில், பயணியர் அழைத்து செல்லப்படுவர்.
கூடுதல் தகவல்களை ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.