பரிந்துரையின்றி ஆன்டிபயாட்டிக் வேண்டாம்...
சளி, காய்ச்சல், தொண்டை வலி என, சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது.
காரணம் வைரஸ் தொற்றுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் பயனில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
சாதரண வைரஸ் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்தாலே சரியாகி விடும்.
சமுதாய நோய் தொற்றுக்களை தடுக்க, எப்பொழுதும் கைகளை சுத்தகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சோப்பு அல்லது நோய் கிருமிகளை தடுக்கும் சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உருவாகும்.
குழந்தை பருவம் முதலே தடுப்பூசி போடுவது அவசியம். தீவிர தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்க இது உதவும். பல நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை உடலில் ஏற்படுத்தலாம்.
50 வயதுக்கும் மேல் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், தடுப்பூசி போடுவது சிறந்தது.
குறிப்பாக, வைரஸ் காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றை தவிர்க்க முதியவர்களுக்கு அவசியம். நோய்கள் இருப்பின் அதன் தன்மைக்கு ஏற்ப தடுப்பூசி தேவை என கூறப்படுகிறது.