உடல் பருமன்... 15 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிப்பு
இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.
இதில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.4ல் இருந்து 3.1 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
மேலும், 15 - 49 வயதுக்குட்பட்டோரில் பெண்கள் 12.6%ல் இருந்து 24%, ஆண்கள் 9.3%ல் இருந்து 23 சதவீதமும் அதிகரித்துள்ளனர்.
உலகில் 2050ல் உடல் பருமனுள்ள மூன்று இளைஞர்களில் ஒருவர் இந்தியராக இருப்பர் என உலக ஆய்வு தெரிவித்துள்ளது.
துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.
எனவே, உடல் உழைப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு கட்டாயம் தேவை.