தும்மலின் வேகம் அறிவோமா?
ஒவ்வாமையால்தான் தும்மல் ஏற்படுகிறது.
வைரஸ் தொற்று, குளிர் காற்று, மன அழுத்தம், சுற்றுச்சூழல் எரிச்சல் போன்ற பல காரணிகளும் இதற்கு வழிவகுக்கும்.
துாசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழையும்போது, அவற்றைத் தும்மலின் மூலம் உடல் வெளியேற்றுகிறது.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் தும்மல் வெளிப்படும் போது, கண்கள் அனிச்சையாக மூடிக்கொள்கின்றன.
தும்மலில் இருந்து வெளிப்படும் கிருமிகள் கண்களுக்குள் செல்லாமல் இருப்பதற்காக, இமைகள் மூடிக் கொள்கின்றன.
கண், மூக்கு போன்ற உறுப்புகள் இணைப்பில் இருப்பதால் மூக்குக்கு ஒரு பிரச்னை என்றால் கண்களும் சேர்ந்து அந்தச் செயலில் பங்கேற்கின்றன.