காகித கப்களில் டீ, காபி குடிப்பவர்களா நீங்கள்?

பிளாஸ்டிக் கப்களுடன் ஒப்பிடும்போது காகிதக் கப்களை ஆரோக்கியமானதாகக் கருதலாம். ஆனால் இந்த கப்களின் உட்புறமும் பிளாஸ்டிக் பூசப்பட்டிருப்பதால் அவை ஆரோக்கியமற்றவை.

சூடான திரவத்தை வெறும் 15 நிமிடங்களுக்கு பிளாஸ்டிக் பூசப்பட்ட டிஸ்போசபிள் காகிதக் கப்களில் ஊற்றிப் பருகும் போது, ஆயிரக்கணக்கான சிறிய பிளாஸ்டிக் துகள்களை மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடும்.

ஒரு நபர் ஒரு காகிதக் கோப்பையில் மூன்று கப் டீ அல்லது காபி குடித்தால், அவர்கள் 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வார்கள்.

காகிதக்கப்களில் தினந்தோறும் சூடான பானங்களைக் குடித்து வந்தால் புற்றுநோய், நரம்பியல் கோளாறு,ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், இனப்பெருக்க பிரச்சனைகள் ஆகிய அபாயத்தை ஏற்படுத்தலாம்.

காகிதக் கப்பில் குளிர்ந்த பானங்களைப் பருகும் போது, அவை ரசாயனங்களை வெளியிடுவதில்லை. ஆகையால் குளிர்ந்த பானங்களைப் பருகுவதற்கு இது பாதுகாப்பானது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் காகிதக் கப்கள் தவிர்த்து, பழைய முறைப்படி பீங்கான் அல்லது கண்ணாடி கோப்பைகளில் சூடான பானங்களை அருந்தலாம்.