சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உண்டாகிறதா? தீர்வுகள் சில...

ஜூன் முதல் ஆக., வரை அதிக வறட்சி காணப்படும். இந்த காலத்தில் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வியர்வையாக வெளியேறி விடுவதால் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்.

அதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் அதிகமான தண்ணீர் குடிப்பதை விட அவ்வப்போது தேவையான அளவு குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் குடிக்கவும்.

தினமும் இளநீர், எலுமிச்சை சாறு போன்ற நீராகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகள், பால் சார்ந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கல்லடைப்பு உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறிய அளவில் கல்லடைப்பு இருந்தால் ஆரம்பத்தில் எளிதாக உணவு மூலம் சரிசெய்ய முடியும். பிரச்னை அதிகமானால் அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.