குழந்தைகளுக்கு அடிக்கடி ஜூஸ், ஜாம் தர்றீங்களா? கொஞ்சம் உஷாராக இருங்க !
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட், இனிப்புகள், நொறுக்குத் தீனிகள், ஜூஸ் போன்றவை நீரிழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் உட்கொள்ளும் ஜூஸ், டோஸ்ட் மற்றும் கார்ன்பிளேக்ஸ் போன்றவற்றில் சர்க்கரை முக்கியப்பங்கு வகிப்பதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.
அதிகப்படியான சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாறுவதால், கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது. டைப் 2 நீரிழிவு பாதிப்பும் உண்டாகும் அபாயமும் உள்ளது.
எனவே, எளிமையான வாழ்க்கை மாற்றங்கள் மூலமாக சர்க்கரை அளவை குறைக்கலாம்.
ஒருவர் தினமும், 30 கிராம் அளவிற்கு தான் இனிப்பை உணவில் சேர்கக வேண்டும். சர்க்கரைக்கு பதிலாக செயற்கை ஸ்வீட்னர்களை குறைந்த அளவில் சேர்க்கலாம்.
சாக்லேட், இனிப்புகள், கேக்குகள், பிஸ்கட் போன்றவற்றுக்கு மாற்றாக, ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளான யோகர்ட், உப்பிடாத நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம்.
சர்க்கரையின்றி எலுமிச்சை சாறு குடிக்கலாம். காபி, குளிர்பானங்கள், உலர் பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள் உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும்.
முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கீரை, பயறு, பட்டாணி, பீன்ஸ், சோயா மற்றும் முழு தானியங்கள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கொய்யா போன்ற பழங்களையும், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களையும் உட்கொள்ளலாம்.
அதிக புரதமும், குறைந்த சர்க்கரையும் உள்ள வேர்க்கடலை, பாதாம் போன்ற பருப்பு வகைகளை சேர்க்கலாம்.