கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? அலட்சியம் வேண்டாம்... இதோ சில டிப்ஸ்
காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும்.
இதை நாம் பெரும்பாலும் கைகளை கழுவாமல் அப்படி தேய்த்தால் தான் திருப்பதி கிடைக்கும் என அவசர அவசரமாக தேய்த்து விடுவோம். பெரும்பாலும் கைகளில் இருந்து தான் கண்களுக்கு தொற்றுக் கிருமிகள் பரவுகிறது.
இதனால், கண்கள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். தற்காலிகமாக தோன்றும் இந்த தொந்தரவுகளை போக்க ஒருசில இயற்கை மருத்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்கள் மீது வைத்தால், வறண்ட கண்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.
ரோஸ் வாட்டர் கண்களில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். இதை நேரடியாக பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து துணியில் நனைத்து கண்களை துடைத்து வந்தால் அரிப்பு நீங்கும்.
பாலை துணியில் நனைத்து இமைகள் மீது துடைத்து வர அரிப்பு குணமாகும். வெந்நீரில் உப்பு கலந்து அந்த நீரை பஞ்சு துணியில் நனைத்து கண்கள் மீது வைத்தால் அரிப்பை தடுக்கலாம்.
தயிரை கண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் துணியை நனைத்து துடைத்தால் அரிப்பு நீங்கும். சீரகத் தண்ணீரை கொண்டு தினமும் இருவேளை கண்களை கழுவி வந்தால், எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை சாறை கொண்டு கண்களை துடைக்கலாம். எரிச்சல் இருந்தாலும் அழுக்குகள் எளிதில் வெளியேறி நிவாரணம் கிடைக்கும்.
ஐஸ் கட்டிகளை துணியில் சுற்றி கண்கள் மீது ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.
இவை அனைத்தும் தற்காலிக தொந்தரவுகளுக்கு தீர்வு அளிக்கும். தொற்றுப் பிரச்னை அதிகமாக இருந்தால் டாக்டரை அணுகுவது சிறந்ததாகும்.