வாக்காளர் அட்டை இல்லாமல் ஓட்டு போடலாம்! எப்படி?

சட்டசபை தேர்தல் 23ல் நடைபெறுகிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்கள் ஓட்டளிக்கும்போது அடையாள அட்டையை காட்ட வேண்டும். முடியாத பட்சத்தில், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள மாற்று ஆவணங்களில் ஒன்றை காட்ட வேண்டும்.

ஆதார் அட்டை

ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டை

புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக சேமிப்பு புத்தகங்கள்

தொழிலாளர் நல அமைச்கம் வழங்கிய மருத்துவ காப்பீடு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை

டிரைவிங் லைசென்ஸ்

வருமான வரி கணக்கு எண் அட்டை (பான் கார்டு)

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை

பாஸ்போர்ட்

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை

லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை