குழந்தைக்கு நாக்கு ஒட்டி இருப்பது போல் உள்ளதா? எவ்வாறு சரிசெய்வது?
நாக்கு ஒட்டி இருப்பது என்பது பிறக்கும் போதே இருக்கும் ஒரு நிலை.
இது குழந்தைகளுக்கு நாக்கை அசைக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
நாக்கின் அடிப்பகுதியை வாயின் கீழ்ப்பகுதியுடன் இணைக்கும் லிங்குவால் ப்ரெனுலம் எனப்படும் திசுப் பட்டை அசாதாரணமாகக் குட்டையாக, தடினமாக, இறுக்கமாக இருக்கும்.
நாக்கு ஒட்டு குடும்பத்தில் பரம்பரையாக வரலாம். இது பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் காணப்படுகிறது.
சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நாக்கு ஒட்டுக்கள் பற்களின் சீரற்ற அமைப்பு, மோசமான வாய் சுகாதாரம், பேச்சுத் திணறல், சாப்பிடுவதில் சிக்கல் ஏற்படுத்தக்கூடும்.
எனவே நாக்கு ஒட்டு இருப்பதை உணர்ந்தால் பல் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைக்கு முறையான பரிசோதனை செய்து, அவரின் ஆலோசனை படி இவற்றை சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்து விடலாம்.