சென்னை வாசிகள் ஒன் டே ட்ரிப் செல்ல ஏற்ற இடம் புலிகாட் ஏரி!
சென்னையை அடுத்த பழவேற்காட்டில் புலிகாட் ஏரி உள்ளது.
இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
அதில் 300 ஹெக்டேர் தமிழ்நாட்டிலும், மீதமுள்ள பகுதிகள் ஆந்திராவிலும் உள்ளது.
ஒரு நாள் சுற்றுலா செல்ல இது ஏற்ற இடம்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் படகு சவாரி அழைத்து செல்லப்படுகிறது.
2 மணி நேர படகு சவாரிக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.
படகு சவாரி முடித்து கரைக்கு திரும்பியவுடன் சுவையான மீன், நண்டு உணவுகள் பிரஷ்ஷாக கிடைக்கும்.
புகைப்பட கலைஞர்கள் கேமராவிற்கு ஏரியின் அழகும், பறவைகள் வருகையும் சிறந்த விருந்து.