இன்று சர்வதேச முத்த தினம்...

காதலர் தினத்துக்கு முதல் நாளான, பிப்., 13 அன்று, காதலர்கள் தங்களுக்குள் முத்த மழைப் பொழிந்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வர்.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காதலர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக முத்த தினம் கொண்டாடப்பட துவங்கியது.

பெரும்பாலும் அது ஒரு அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

உலகில் சுமார் 24 வகையான முத்தங்கள் இருப்பதாக சொல்கின்றனர்.

கன்னத்தில் முத்தமிட்டால் அது இரண்டு நபர்களிடையே பாசத்தையும் நெருக்கத்தையும் குறிக்கிறது.

நெற்றியில் முத்தமிட்டால் காதல் உறவில் இருக்கும் பாதுகாப்பை உணர்த்துவதாகும்.

கைகளில் முத்தமிடுவது மரியாதையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மூக்கின் மீது கொடுக்கும் முத்தம் துணையின் மீது வைத்திருக்கும் செல்லமான அன்பு வெளிப்படுத்தும் விதமாகும்.

பிரஞ்சு கிஸ் இது காதலில் உணர்ச்சிமிக்க முத்தம்.