இரண்டு வயது குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சலா?
குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் முதலில் பதட்டம் அடைவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் ஒரு நோய் அல்ல. வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் ஏற்படுகிறது.
சளி, இருமல், தொண்டை அல்லது காது தொற்று போன்றவையும் காய்ச்சல் வருவதற்கான காரணமாக இருக்கலாம்.
குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால், தண்ணீர், வயதுக்கு ஏற்ற திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும்
குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, தாய்ப்பால் குடிக்க மறுத்தாலோ, அடிக்கடி வாந்தி எடுத்தாலோ உடனடியாக அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்.
அவரின் ஆலோசனைபடி குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும்.
வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.