அலட்சியமா இருக்காதீங்க... மலக்குடலில் ரத்தம் வந்தால் புற்றுநோயாக இருக்கலாம்!
மலக்குடலில் ரத்தம் வருகிறது என்றால் ஆசனவாயை மட்டும் கவனிக்கக் கூடாது. குடலின் உள்பகுதியையும் ஆய்வு செய்தால்தான் புற்றுநோயா என்பது தெரியும்.
'கொலோனோஸ்கோப்பி' மூலம் குடலின் உள்பகுதியை ஆய்வு செய்து திசுப் பரிசோதனை செய்தால் புற்றுநோயா இல்லையா என்பதை உறுதி செய்யலாம்.
அபாய கட்டமான 4ம் நிலையில் சிகிச்சை பெற வரும் போது குணப்படுத்துவது கடினம். முன்கூட்டியே கண்டறிந்தால் ஆரம்பநிலையில் குணப்படுத்தி நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
பலரும் மூலநோய் என்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்வர்; அவர்களுக்கு பரிசோதனை செய்து புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என உறுதி செய்யலாம்.
அடுத்த நிலையில் மலக்குடலில் சிலருக்கு காலம் காலமாக புண் (ரெக்டல் அல்சர்) இருந்து, அதன் வழியாக மூலநோய் இல்லாமலே ரத்தம் வெளியேறும்.
இது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புண்டு.
அடுத்து 'பாலிப் அல்சர்' எனும் மலக்குடலுக்கு தசைகட்டி உருவாகி சில ஆண்டுகளில் புற்றுநோயாக மாறும்.
இதையும் முன்கூட்டியே 'பயாப்சி' பரிசோதனை மூலம் கண்டறிந்து ஆப்பரேஷன் செய்தால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.