உணவே மருந்து... உற்சாகமாகும் தேர்வு

தேர்வின் போது இரவில் அதிக நேரம் கண் விழித்து படிக்க கூடாது; அது தேர்வில் சோர்வை உருவாக்கி விடும்.

முதல் நாள் இரவு முழுவதும் படிக்காமல் குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்கு துாங்க வேண்டும். அப்போது தான் மறுநாள் உடல்நிலை தேர்வுக்கு ஏதுவாக இருக்கும்.

முடிந்தவரை காரம் நிறைந்த, உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு பதார்த்தங்களை தேர்வு முடியும் வரை எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணலாம். தேர்வுக்கு சாப்பிடாமல் செல்வதையும், அதிகளவில் சாப்பிட்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

பசிக்கு ஏற்ப உணவு அருந்தினால் தான், சுறுசுறுப்பாக இருக்க முடியும். இயன்றவரை கண்களுக்கு ஓய்வு தந்து விட்டு, மீண்டும் படிக்கலாம்.

நாள் முழுவதும் 1.5 - 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது கவனத்தை மேம்படுத்தும்.

அதிக சர்க்கரை உள்ள உணவுகள், பேக்கரி உணவுகள், துரித உணவுகள் மற்றும் அதிகப்படியான காஃபின் உடலை மந்தமாக்கும். எனவே அவற்றைத் தவிர்க்கவும்.

குறிப்பாக பிஸ்கட் , ஸ்வீட்ஸ்க்கு பதிலாக பழங்கள் மற்றும் உலர் பழங்கள், வேகவைத்த பயறு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.