திடீர் மாரடைப்பு ஏற்பட காரணங்கள் என்னென்ன?

இதய ரத்த குழாயில் அதீத ரத்த அழுத்தம் ஏற்பட்டு அளவுக்கதிகமான ரத்தம் பாய்ந்து குழாய் அடைப்பை ஏற்படுத்துவது திடீர் மாரடைப்பு ஆகும்.

இதயக் குழாயின் உள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொலஸ்டிரால் சேர்ந்து ரத்தவோட்டத்தைத் தடுக்கும். இதனால் இதயம் செயல்பட போதிய ஆக்ஸிஜன், ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு வரும்.

இந்தத் துடிப்பு நாம் ஓய்வில் இருக்கும்போது அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மித வேகத்தில் இருக்க வேண்டும்.

சில சமயங்களில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதீத பளு தூக்கி பயிற்சி செய்யும்போது துடிப்பு திடீரென சில விநாடிகள் நிற்கும். அப்போது திடீர் மரணங்கள் ஏற்படலாம்.

ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள், புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், உடற்பருமனானவர்களுக்கு இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இது அனைத்து வயதினரையும் தாக்க வாய்ப்புள்ளது. இது எதனால் ஏற்படுகிறது என மருத்துவ விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.

வயது மூப்பின்போது ஒருவர் எந்த நோயால் மரணம் அடைந்தாலும் இறுதியில் இதயத் துடிப்பு முடங்கியே மரணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.