உருட்டுகளைக் கேட்டு பார்ட்னரை தேர்வு செய்யாதீர்கள்... நொந்துபோவீர்கள்!
திருமணத்திற்கு அல்லது காதலுக்கு துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து திருமணம் மற்றும் குடும்ப உறவு தெரபிஸ்ட் லிண்டா காரல் ரிலேஷன்ஷிப் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.
ஒருவரை தேர்வு செய்யும் முன் அவரிடம் கேட்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னென்ன?
காதல் மயக்கத்தில் இருக்கும்போது, நம்மில் பெரும்பாலோர் பயங்கரமாக நம்மை அறியாமலேயே கண்டதையும் உருட்டியிருப்போம்.
அவர் குடும்ப உறவில் எல்லாமே மோசமானவை என்கிறாரா அல்லது எல்லாமே சரியானவை என்று கூறுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
தோல்வியுற்ற காதல்களுக்கு, அவர்களும் சில பொறுப்பை ஏற்கிறார்களா என்பதைப் பார்க்கவும்.
கோபத்தில், அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
காதல் தேய்ந்து போகும்போது ஒருவர் எவ்வளவு பெருந்தன்மையாக இருப்பார் என்பதற்கான அறிகுறிகளை நீங்கள் தேட வேண்டும்.
தன்னுடைய வளர்ச்சிக்கு என்ன எதிர்கால திட்டம் வைத்துள்ளார். என்ன வருவாய் ஈட்டுகிறார் என்பதையும் ஆராய வேண்டும்.
அதை விடுத்து கண்டதும் காதல் என்றால் வாழ்க்கை முழுக்க நொந்து கொண்டு தான் வாழ வேண்டும்.