புளிதான்னு அலட்சியம் வேண்டாம்... ஆரோக்கியத்தை அள்ளி தரும் இது...!
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பட பல்வேறு சத்துகள் புளியில் நிறைந்துள்ளன.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத் துடிப்பை சீராக வைக்கிறது.
இதில், ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவக்கூடிய மெக்னீசியம் அதிகமாக உள்ளது.
புளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும்.
இது ஒரு டானிக் போலவும், கிளீனிங் ஏஜென்ட் போலவும் செயல்படுகிறது. குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளின் செயலிழப்பைக் கட்டுப்படுத்துகிறது.
சட்னிகள் முதல் கறிகள் வரை, புளி உணவில் சுவையை சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டியாகும்.