இந்த ஜனவரியில் மணாலிக்கு ஒரு டிரிப்.. மிஸ் பண்ணிடாதீங்க !
தண்ணீரைப் போன்று பனியில் விளையாட யாருக்குத்தான் பிடிக்காது. குளிர்காலத்தில் மணாலி மாயாஜாலமாக காட்சியளிக்கிறது.
மணாலியில் அக்., முதல் பிப்., வரை குளிர்கால சீசன் உள்ளது. மிதமான, கடுமையான பனிப்பொழிவுடன், பார்க்கும் இடமெல்லாம் மென்மையான, வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும்.
இங்கு புதிய பனிப்பொழிவைக் காண ஜனவரி சிறந்த நேரம். பனிச்சறுக்கு, ஸ்னோ ஸ்கூட்டர் ரைடிங், ஸ்னோ விளையாடுதல் போன்ற பனி விளையாட்டுகளை ஜாலியாக என்ஜாய் செய்யலாம்.
கேபிள் கார் சவாரிகள், ஹெலிகாப்டர் சவாரிகள், பனிச்சறுக்கு, மலையேற்றம் மற்றும் சோர்பிங் மற்றும் பலவற்றில் ஈடுபடலாம்.
அருகிலுள்ள சோலாங் பள்ளத்தாக்கு சென்றால் பாராகிளைடிங் சாகசத்தில் மிதக்கலாம்.
பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுக்கு இங்குள்ள ரோஹ்தாங் பாஸ் பிரபலமான பனிச்சொர்க்கமாகும்.
பனியில் டிரெக்கிங் செய்ய விரும்பினால், ஹம்ப்டா பாஸ்க்கு விசிட் செய்யலாம். பிர் பஞ்சால் மலைத்தொடரில் 4,270 மீ., உயரத்தில் அமைந்துள்ளது இது.
ஹடிம்பா தேவி கோவில், ரோஸி மற்றும் ஜனா நீர்வீழ்ச்சிகள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளது.