மன அழுத்தத்தை குறைக்க இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க !

தினமும் காலையில் சிறிது நேரம் வெறுங்கால்களுடன் புல் தரையில் நடங்கள். அப்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய எண்டோர்பின் ஹார்மோன்கள் உடலில் சுரப்பதால், மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

தினமும் மூச்சை நன்றாக இழுத்து வெளிவிடக்கூடிய ஆழ்ந்த சுவாச மூச்சுப்பயிற்சிகளை முயற்சிக்கலாம். மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க யோகா உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மாலையில் தினமும் ஒரு வாழைப்பழம், சீமை சாமந்திப்பூ (chamomile) டீ போன்றவற்றை சாப்பிடலாம். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் தூக்கத்தை தூண்டுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

அதேப்போல் கொக்கோ ஸ்மூத்தியை சாப்பிடலாம். இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில், மகிழ்ச்சிக்கான செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

படுக்கைக்கு செல்லும் முன் ஊறவைத்த ஓரிரு முந்திரியை சாப்பிடுவது சிறந்த தூக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

மதிய உணவின் போது மோர் சாப்பிடுவதும் செரோடோனின் அளவை ஒழுங்குப்படுத்துகிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் தூக்கத்துக்கான மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியை தூண்டும் பண்புகள் உள்ளதால், கிழங்கை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்; சாட் ஆக செய்து சாப்பிடலாம்.