மருத்துவ காப்பீடு எடுக்கும்போது இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க

மருத்துவச் செலவு உயர்ந்து வருவது, நோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஆகியவை, தனிநபர் மருத்துவ காப்பீட்டின் தேவைக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

எனவே, மருத்துவ காப்பீட்டைப் பொறுத்தவரை, விரிவான காப்பீட்டை உறுதி செய்வது மன அமைதிக்கு முக்கியமாகும்.

உங்களது மருத்துவ வரலாறு, தற்போதைய நிலை மற்றும் எதிர்கால மருத்துவச் செலவுகள் போன்றவற்றை கண்காணித்து, தேவைகேற்ற கவரேஜ் அடங்கிய திட்டத்தை தேர்வு செய்யவும்.

உங்களின் மருத்துவக் காப்பீட்டை எந்த கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்வது நெட்வொர்க் மருத்துவமனையாகும். எனவே நீங்கள் வசிக்குமிடத்துக்கு அருகில் உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும்.

அறை வாடகைக்கு எந்த வரம்பும் இருக்கக்கூடாது. அவசரத்துக்கு டீலக்ஸ் அறைகள் கிடைக்கும் போது, மொத்த காப்பீட்டில் அதிகளவு அறை வாடகைக்கே செலவாகக்கூடும்.

மொத்த மருத்துவ செலவில் நம் கைகளில் இருந்து பணம் செலுத்தக்கூடாது. மொத்த செலவும் காப்பீட்டு தொகையிலேயே கழிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

காப்பீட்டு தொகையின் மதிப்பு ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.