3டி டெக்னாலஜியில் நிலாவில் சீனா அமைக்கும் கூடம்
3டி பிரிண்டிங் முறையில் நிலாவில் கட்டடம் ஒன்றை எழுப்ப சீனா ஆயத்தமாகி வருவதாக சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.
கடந்த 2020ல் சாங் என்ற ஒரு சாட்டிலைட் ஒன்றை அனுப்பி அங்கிருந்து சிறிது மண் பரிசோதனைக்கு எடுத்துவரப்பட்டது.
இது வரும் 2030 ஆம் ஆண்டு மூன்று சாட்டிலைட்களை நிலாவிற்கு அனுப்பி அந்த நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்வதற்காக கட்டடம் ஒன்றை அமைக்க உள்ளதாம்.
அங்குச் சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளங்கள் எவ்வாறு இருக்கின்றன, என்று ஆராய்ச்சி நடந்து வருவதாக சீனாவின் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில், நிலாவில் உள்ள மணல்களை வைத்தே கற்கள் செய்வதற்கு ஒரு ரோபோ செயல்பட்டு வருகிறது.
சீனாவின் இந்த முயற்சி அமெரிக்காவை திரும்பி பார்க்க வைக்க செய்யும் என்றுக் கூறப்படுகிறது.