கர்நாடகாவின் பாதாமியில் இதையெல்லாம் பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

கர்நாடகாவில் அமைந்துள்ள பாதாமி, வரலாற்றில் மூழ்கிய நகரமாகும். இந்த இடம் கட்டடக்கலை அற்புதங்கள், குகைகள், இயற்கை அழகு மற்றும் பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் என கலை, இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கிறது.

கலை மற்றும் ஆன்மீகத்தின் பொக்கிஷமான பாதாமி, கர்நாடகாவின் கலாச்சார பாரம்பரியத்துக்கு உதாரணமாக உள்ளது. இங்கு சென்றால் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களை இங்கு பார்க்கலாம்.

அகஸ்தியர் ஏரியின் அழகிய கரையில் அமைந்துள்ள பூதநாதர் கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; திராவிட கட்டடக்கலைக்கு உதாரணமாக உள்ளது.

கர்நாடகாவின் மற்றொரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பட்டடகல், சாளுக்கிய கட்டிடக்கலையின் பிரமாண்டத்துக்கு உதாரணம். இங்கு, மல்லிகார்ஜுனா, காசி விஸ்வநாதர் மற்றும் விருபாக்ஷா கோவில்களை ரசிக்கலாம்.

பாதாமிலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது ஐஹோல். திராவிட, நாகரா மற்றும் வேசரா கட்டடக்கலை பாணிகளின் கலவையில் இங்கு பெரிய கோவில்களை பார்க்கலாம். நுணுக்கமான சிற்பங்கள், கற்சிற்பங்கள், தூண்கள் வியக்க வைக்கும்.

உயரமான பாறைகள் சூழ அமைந்துள்ள அகஸ்தியர் ஏரியில், சூரிய உதயமும், அஸ்தமனமும் கண்கொள்ளா காட்சியாகும்; படகு சவாரி செய்து மகிழலாம்.

இந்து, ஜைன தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாதாமி குகைக் கோவில்கள் பாறைகளால் வெட்டப்பட்டுள்ளன. 4 குகைகளில் உள்ள 6ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் சாளுக்கிய கட்டடக்கலையை போற்றுகின்றன.