அழகிய ஹேர்ஸ்டைலில்.. கூந்தல் உதிர்வை மறைக்கலாம்...!

கூந்தல் உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இயல்பான பிரச்னையாக உள்ளது. டீனேஜ் பருவத்தினர் கூட கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்தில்லா உணவு, போதிய பராமரிப்பின்மை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சிகிச்சை முறைகளை பின்பற்றுவது ஒருபக்கம் இருந்தாலும், தற்போதுள்ள உங்களின் அரையடி கூந்தலை அடர்த்தியாக காட்டும் மேஜிக்கல் வழிமுறைகள் இதோ...

சிறிதளவு கூந்தலை முன்பக்கமாக வெட்டி விடும்போது, உங்களின் நெற்றியை மறைத்தவாறு முன்பக்கமாக இருக்கும். இது ஸ்டைலிஷான தோற்றத்தை தருவதுடன், உங்களின் வயதையும் குறைத்துக்காட்டும்.

கூந்தலை லேயர் கட் செய்து ப்ரீயாக விடலாம்; பாதி கூந்தலை மட்டும் முன்புறம் தோளில் படர வேண்டும். இது உங்களை இளமையாகவும், மிகவும் உற்சாகமாக இருப்பது போன்ற ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்ட உதவுகிறது.

உங்கள் கூந்தல் நிறத்துக்கேற்ப லிப்ஸ்டிக்கை சிறிதளவு நெற்றிப்பகுதியில் மெலிதாக தேய்க்கலாம். அப்போது கூந்தல் அடர்த்தியாக இருப்பது போன்ற ஒரு மாயையை அது உருவாக்கும்.

காஜல் பயன்படுத்தி நெற்றி கூந்தலை ஒட்டியவாறு சிறிது கோடுகளை வரையலாம். கூந்தலின் நிறத்துக்கேற்ப கோட்டின் நிறமும் இருந்தால் எளிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

சாதாரண சீப்புகளுக்கு பதிலாக ஹேர் பிரஷ் பயன்படுத்தினால், கூந்தல் மென்மையாக இருப்பதுடன், அடர்த்தியாக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.