வெயிலில் அதிக நேரம் நிற்க வேண்டாம்... பொது சுகாதாரத்துறை அட்வைஸ்

அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பினை தடுக்க, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்வது முக்கியம் என்பதால் அதிக நீர் அருந்த வேண்டும்.

உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை ஜூஸ், மோர், இளநீர் உள்ளிட்ட பானங்களை அருந்தலாம்.

இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை தளர்வாக அணியலாம். வசிப்பிடங்களில், காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

குடை, தொப்பி, கையுறை என வெப்பத்திலிருந்து தற்காக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். காலணி அணிந்து வெளியே செல்ல வேண்டும்.

முதியோர், இணை நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணியர், நேரடி வெயிலில் பணியாற்றுவோர், குளிர் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்கவும். வெயிலில் தீவிரமாக பணியாற்றக் கூடாது.

மது, புகை, தேநீர் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால், மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும் என பொது சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.