ரயில் நிலையங்கள் குடிநீரில் இ கோலை பாக்டீரியா.. மத்திய அரசின் தணிக்கையாளர் சிஏஜி எச்சரிக்கை!

இந்தியாவின் பல ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் மாதிரிகளில் ஆபத்தான இ கோலை பாக்டீரியா இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், பாலக்காடு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல முக்கிய நிலையங்களின் நீர் குளிரூட்டிகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தணிக்கை செய்யப்பட்ட 512 நிலையங்களில் 458 நிலையங்கள் அடிப்படைப் பயணிகள் வசதிகள் மற்றும் தூய்மைப் பராமரிப்பில் குறைப்பாடு இருப்பாதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக பல ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் குளோரின் கலக்கப்படவில்லை

இதனால் இ கோலை போன்ற கிருதிகள் கலந்தும் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆறு வெவ்வேறு ரயில்வே மண்டலங்களில் உள்ள 59 நிலையங்களில் குடிநீரின் நுண்ணுயிரியல் பரிசோதனை செய்யப்படவே இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அசுத்தமான குடிநீரை அருந்துவதால் வயிற்றுப்போக்கு, தீவிர குடல் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ரயில் நிலையங்களில் கிடைக்கும் தண்ணீருக்கு பதிலாக, வீட்டிலிருந்தும் அல்லது பாதுகாப்பான சீல் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது.