இன்று உலக கிட்னி தினம்!

சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கிட்னி தினம் மார்ச் இரண்டாம் வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.

உடல் உறுப்புகளில் முக்கியமானது 'கிட்னி' எனும் சிறுநீரகம். இது ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உணவுப்பழக்கம் உள்பட பல காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

சிறுநீரக பாதிப்பில் முக்கியமானது கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு கற்களாக உருவாகின்றன. உடல் உறுப்புகளில் மூளை, இருதயம் போன்று சிறுநீரகமும் மிகவும் முக்கியமானது.

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'அனைவருக்கும் கிட்னி ஆரோக்கியம் - மக்களை பராமரித்தல், பூமியை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். பாதிப்பை தவிர்க்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.