இனி தயக்கம் வேண்டாம்; தைரியமாக நீங்களும் எலெக்ட்ரிக் பைக் வாங்கலாம்!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் பெட்ரோல் விலை உயர்வாலும், காற்று மாசு காரணமாகவும் எலெக்ட்ரிக் மக்கள் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி வருகின்றனர்.
ஆனாலும், சார்ஜிங் நிலைய பற்றாக்குறை என்ற ஒரு விஷயம் ஒரு சிலருக்கு எலெக்ட்ரிக் வாகனம் வாங்க தடையாக உள்ளது.
அதிலும் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சார்ஜிங் மையம் இல்லாமல், நகர்புறத்திலேயே முக்கியமான இடங்களில் மட்டுமே உள்ளதும் ஒரு குறைபாடுதான்.
ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததன் விளைவாகவே இந்த திட்டமானது அமைய உள்ளது.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 150 நிலையங்களை கட்டமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து நிலையங்களையும் கட்டமைக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த மையத்தில் வெறும் ஒரு நிமிஷம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 1.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.
இந்த மையங்களை எளிதில் கண்டறிவதற்கு, அப்ளிகேஷன் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு, இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.