புருவத்தில் டாட்டூ ப்ரோ ஜெல்... கண்களை வசீகரிக்குமா?
எடுப்பான முக அழகிற்கு புருவங்களின் வடிவமும் முக்கியம். ஆனால், நம்மில் பல பேருக்கு இருக்கிற பெரிய கவலையே, புருவம் மட்டும் அடர்த்தியாவே இல்லை என்பதுதான்.
புருவம் மட்டும் அடர்த்தியாக இல்லாதவர்களுக்கு முக அழகிற்கு புருவங்களின் வடிவம் பெற 'டாட்டூ' என்கிற ஒரு மேஜிக் பியூட்டி புராடக்ட் வந்து விட்டது.
புருவங்களை அடர்த்தியாக்க, ஐப்ரோ பென்சிலுக்கு பதிலாக வந்துள்ளது இந்த 'டாட்டூ ப்ரோ (Tattoo Brow) ஜெல். பார்க்க மஸ்காரா டப்பா மாதிரிதான் இருக்கும்.
உள்ளே ஜெல் பேஸ்ட் (Gel paste) இருக்கும். இதை 'செமி பெர்மனன்ட் டின்ட் ஐப்ரோ ஜெல்' (Semi-permanent tint eyebrow gel) என்றும் சொல்வார்கள்.
உங்கள் புருவங்களின் மேல் இந்த ஜெல்லை அழகாக தடவி, சிறிது நேரம் காய விடுங்கள். நன்றாகக் காய்ந்ததும், ஒரு மெல்லிய தோல் போல உரித்து (Peeled off) எடுத்து விடலாம்.
அடர்த்தியான, அழகான வில் போன்று புருவங்கள் மாறியிருக்கும். மைக்ரோ பிளேடிங் போன்ற பார்லர் ட்ரீட்மென்ட்களை செய்ய பயப் படுபவர், இந்த டாட்டூ ஜெல் உபயோகித்து பார்க்கலாம்.
ஸ்மட்ஜ் (Smudge) மற்றும் வாட்டர் புரூப் (Water proof) என்பதால் தண்ணீர், வியர்வையாலோ அல்லது கைகள் படுவதாலோ கலைந்துபோகாது.