மாடித்தோட்டத்தில் விதையிலிருந்து கிவி வளர்க்க ஈஸி ஸ்டெப்ஸ்
கிவி பழத்தை வாங்கி தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவை நன்றாக பழுக்காததாகவும், புதியதாகவும் இருப்பது அவசியமானது.
ஒரு பவுலில் சிறிது தண்ணீரை ஊற்றி கிவி பழத்தை மெதுவாக அழுத்தியவாறு பிசையவும். அப்போது பழத்தின் சதைப்பகுதி கூழாக விதையிலிருந்து பிரியும்.
சல்லடையை பயன்படுத்தி விதையிலிருந்து கூழ் நீரை பிரிக்கவும். பின் விதைகளை ஒரு தடிமனான டிஷ்யூ பேப்பரில் வைத்து நன்றாக வெயிலில் ஒரு மணி நேரத்துக்கு உலர விடவும்.
உரம், எரு மற்றும் மண் கலந்த பூந்தொட்டியில் இந்த விதைகளை தூவி சிறிது தண்ணீர் தெளிக்கவும். அதிகளவில் தண்ணீர் விட்டால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படக்கூடும்.
இந்த தொட்டியை பிளாஸ்டிக் கவரால் மூடியவாறு வெயில் அதிகளவில் படாதவாறு வைக்கவும். ஈரப்பதம் காரணமாக 20 நாட்களில் இலைகள் துளிர்விடக்கூடும்.
பின், அவற்றை பெரியளவிலான தொட்டி அல்லது நிலத்துக்கு மாற்றிவிடலாம். தினமும் 2 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைத்தாலே போதுமானது.
அதிக தண்ணீர் விட்டால் சிறிய இலைகளும், வேர்களும் அழுகிவிடக்கூடும் என்பதால், ஒரு நாளுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது.
செடி பெரியதாக கொடியாக படர துவங்கும் போது, ஆங்காங்கே குச்சி அல்லது கம்பியால் பந்தல் போன்று அமைக்கலாம்.
நன்றாக வளர்ந்து கிவி பழம் கிடைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகக்கூடும். காய்க்கத் துவங்கும் முன் கருப்பு அல்லது தங்க நிற மொட்டுகளுடன் வெள்ளை நிற பூ பூக்கக்கூடும்.