செல்போன் அடிக்ஷனிலிருந்து குழந்தைகளை எப்படி தடுப்பது?
ஆபத்தான விஷயங்கள் இருக்கும் விளையாட்டுகளை குழந்தைகள் விளையாட அனுமதிக்கக் கூடாது.
பள்ளிக்கு செல்வதில், படிப்பதில் ஆர்வம், மதிப்பெண் குறைகிறதா என கவனிக்க வேண்டும்.
மேலும், அதிக நேரம் தனிமையில் உள்ளார்களா, பேசுவதைத் தவிர்க்கின்றனரா, இயல்பாக பெற்றோர் பேசும் போது எரிச்சல் அடைகின்றனரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இயல்புக்கு மாறாக உள்ள குழந்தைகள், 'சாப்பிட வா என்று கூப்பிட்டாலும் கோபப்படுவர்...
வெளியில் செல்வதை, குடும்பத்தினரிடம் கலந்து பேசுவதை, இயல்பாக வீட்டில் நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதை விரும்ப மாட்டர்.
குழந்தை அறை கதவை மூடி தனியாக இருப்பது, மாடியில் உட்கார்ந்து படிக்கிறேன் என்பது, நண்பர்களுடன் படிக்கச் செல்வது என கூறினாலே, அன்று பிரச்னை துவங்குகிறது.
படிப்பைத் தவிர வேறு எதிலோ ஆர்வம் உள்ளது என்பதை பெற்றோர் புரிந்து, அனுமதிக்கக் கூடாது.
படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், வீட்டு வேலைகள் அனைத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
அவர்களுடன் இயல்பாக பள்ளி, நண்பர்கள் என்று பல விஷயங்களை
பேசுவது, மொபைல் போன் ஆர்வத்தை குறைக்கும் என்பது மனநல மருத்துவர்களின்
அட்வைஸாகும்.