தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

2024 - 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, மூன்றாவது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.,20) சட்டசபையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில், மழையால் பாதித்த தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.208.20 கோடி நிவாரணத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது.

நெல் ஜெயராமன் மரபு சார் நெல்ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு.

கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும்.

வயல் சூழல் ஆய்வு மூலம் நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க நடவடிக்கை

நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு

10,000 ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ள, 7 லட்சம் தரமான தென்னை நாற்றுக்கள் விநியோகம் செய்யப்படும்