இன்று காதலர்களுக்கான சாக்லேட் தினம்!

பிப்., 9 காதலன் தன்னுடைய காதலிக்கு, சாக்லேட் வாங்கிக் கொடுக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

காதலர் தின வாரத்தின் மூன்றாவது நாள் இந்த சாக்லேட் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இது உறவுகளில் இனிமையைக் கொண்டு வரும். மேலும் அன்புக்குரியவர்களுக்கு சாக்லேட் கொடுப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்தவும் உதவும் நாளாகும்.

இந்த நாளில் சாக்லேட் கொடுப்பது, அன்பை மட்டுமல்ல உறவையும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.

சாக்லேட் சாப்பிடுவது செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது.

இதனால் காதலுர்களுக்குள் ஊடல் இருந்தாலும், இந்த தினம் கசப்பை மறக்க செய்யும். மேலும் கோபம் மறைந்து மனசு லேசாகி மகிழ்ச்சி பிறக்கும்.

அதேபோல் இத்தினம் புதிதாய் மலர்ந்த காதலை துவக்கி வைக்க ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது.