ஆண்களின் முகம் ஜொலிக்க உதவும் ஃபேஸ் பேக்..!

அழகாக தோற்றமளிக்க யாருக்கு தான் பிடிக்காது? பெண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ஆண்களும் சரும பராமரிப்பில் தற்போது அக்கறை செலுத்துவது ஆரோக்கியமான போட்டி தானே.

பெரும்பாலும் ஆண்கள் அதிகளவில் வெளியே அலைவதால், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு, சருமத்தையும் அழகாக வைத்திருக்க சற்று சிரமப்படுவர்.

எனவே, ஆண்கள் தெளிவான சருமத்தை பெறுவதற்கு உதவும் சிறந்த மூன்று ஃபேஸ் பேக் குறித்து பார்க்கலாம்.

முட்டை வெள்ளை கரு, சிறிதளவு காப்பித்தூள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1 டீஸ்பூன் தே.எண்ணெயை நன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும்.

முட்டையின் வெள்ளை கரு, சிறிதளவு எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் தேன் கலந்த கலவையை முகத்தில் அடிக்கடி தடவி கழுவி வர, வறண்ட சருமத்துக்கு தீர்வு கிடைக்கிறது.

மசித்த 1 வாழைப்பழத்துடன், 1 டீஸ்பூன் தேன், 1/2 கப் தயிரை கலக்கி சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். அடிக்கடி இதை செய்ய சருமம் ஜொலிக்கும்.