ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?

பிளேக் நோய் கிருமி தாக்கி ரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வக ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிளேக் நோய் தொற்று எலிகள் உள்ளிட்டவை மூலம் ஏற்படக்கூடியது.

இந்த நோய் கிருமி வேகமாக பரவக்கூடியது மட்டுமல்லாமல், உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்த நோய் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர் அல்லது விலங்கு இருமும்போது, தும்மும்போது காற்றின் மூலம் பரவக்கூடியது.

பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அறிகுறிகளில் மூச்சுத்திணறல், இருமல் அல்லது சளியில் ரத்தம் ஆகியவை அடங்கும்.

இந்த நோய் தொற்றுக்கு என்டரோ பாக்டீரியாவுக்கான பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஆரம்பத்திலேயே கொடுத்தால், அவை இந்த நோயைத் திறம்பட குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

அலட்சியமாக சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமல், நோய் தொற்று பாதித்து 18- 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.