தைராய்டு பரிசோதனை எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை செய்யணும்?

தைராய்டு பரிசோதனையை வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது.

மாத்திரைகளை சாப்பிட்டு தைராய்டு அளவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு, 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனை செய்து 75 எம்.ஜி., 100, 150 எம்.ஜி., மாத்திரை சாப்பிடுபவர்களின் தைராய்டு அளவு, கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாத்திரைகளை தானாக நிறுத்தக்கூடாது.

டாக்டர் ஆலோசனையின் பேரில் தான் மாத்திரைகளை நிறுத்த வேண்டும்.

ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அதை கட்டுக்குள் வைத்திருந்தாலும் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

அதைப்போலவே, தைராய்டு மாத்திரைகளையும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.