இன்று காதலர்களுக்கான ஹக் தினம்!

பிப் 14ல் வரும் காதலர் தினத்திற்கு 2 நாட்கள் முன்பாக ஹக் தினம் கொண்டாடப்படுகிறது.

தாங்கள் விரும்பும் நபர் மீது எவ்வளவு அன்பும், அக்கறையும் தமக்கு இருக்கிறது என்பதை எடுத்துரைப்பதே, 'ஹக் டே!'

பொதுவாகவே அரவணைப்பு என்பது தனிநபர் வாழ்க்கையின் பல தருணங்களில் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.

கட்டி பிடித்தல் ஒரு உணர்ச்சி வெளிப்பாடு. அன்புடன் இது நடக்கும் போது காதலில் நேர்மறையான விளைவுகளை ஊக்குவிக்கும். உனக்காக நான் இருப்பேன் என்பதுபோல.

அதனாலேயே இத்தினத்தில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேசத்தின் அடையாளமாக கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.

உங்கள் காதலர், காதலிடம் அவர்கள் நேசமாகவும், பாதுகாப்பாகவும் உணர ஒரு நீண்ட அரவணைப்பைக் கொடுக்கலாம்.

அதுமட்டுமல்ல உங்கள் பெற்றோர், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் ஒரு அன்பான அரவணைப்பைப் பகிரலாம்