இன்று சர்வதேச சமூக நீதி தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா., சார்பில் பிப். 20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது
சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூகநீதியாகும்.
அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், வாழும் மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகும்.
பிப். 20ல் அகில உலக சமூக நீதி தினமாக அங்கீகரிக்க வேண்டும் என ஐ.நா.வின் பொது சபையின் அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
'அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, சிறந்த பணி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
ஒவ்வொரு நாடும் தன் மக்களின் சம உரிமையை மதித்து, அவர்களுக்கு சம வாய்ப்பை அளித்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்.
அடித்தட்டில் இருக்கிற மக்களை கைதுாக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில்லாமல் சம நீதி சாத்தியமில்லை.