கவர்ந்திழுக்கிறாள் இந்த வண்ணகண் பெண்!
முன்பு கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணாடிக்கு மாற்றாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்தனர். இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
கண் பராமரிப்புக்கான ஒரு சாதனமாக மட்டுமல்லாமல், அணியும் ஆடைகளுக்கும், தனிப்பட்ட தோற்றத்திற்கும் ஏற்ற நாகரிக அணிகலனாக கலர் ஐ லென்ஸ்கள் பார்க்கப்படுகின்றன.
தற்போது பல விசேஷங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருமே தங்கள் ஆடைகளுக்கும், மேக்கப்பிற்கும் பொருத்தமான லென்ஸ் தேர்வு செய்து அசத்துகின்றனர்.
நீங்கள் பெரிய மாற்றத்தை விரும்பவில்லை, ஆனால் கண்கள் மட்டும் சற்று ப்ரைட் ஆக தெரிய வேண்டும் என நினைத்தால், பழுப்பு அல்லது ஹேசல் நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
கண்களை கவர்ச்சியாகவும், எடுப்பாகவும் காட்ட விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் நீல நிறம்தான். இதில் பல ஷேடுகள் கிடைக்கின்றன.
ஒரு கூட்டத்தில் நீங்கள் மட்டும் தனித்துவமாக தெரிய வேண்டும் என விரும்பினால், தாராளமாக பச்சை நிற லென்ஸ் ட்ரை செய்யலாம்.
லென்ஸ் அணியும் முன் உங்களுக்குக் கண்களில் அலர்ஜி அல்லது ஒவ்வாமை ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
லென்ஸ் கையாளும் போது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். லென்ஸ் சொல்யூஷன் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
சரியான பராமரிப்புடன் பயன்படுத்தினால், இந்த கலர் லென்ஸ் உங்கள் கண்களுக்குப் புதிய அழகையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.