இன்று காதலர்களுக்கான ரோஜா தினம்!

பிப்., 7ல் காதலர் வார கொண்டாட்டம் இனிதே துவங்குகிறது. முதல் நாளான இன்று காதலர்கள் தங்களின் பிரியமானவர்களிடம் ரோஜா பூ கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.

மனைவிக்கு மல்லிகை பூ போல காதலை எளிமையாக வெளிப்படுத்த ரோஜா பூ உதவும் . ஒரு ரோஸ் கொடுத்து பிரோபோஸ் செய்யலாம்.

காதலை மட்டுமல்ல மற்றொருவர் மீதான ஈர்ப்பு, இஷ்டம், அன்பு ஆகியவற்றை குறிக்க இத்தினம் உதவும். ஒவ்வொரு ரோஜா நிறத்திற்கு ஒரு காரணமுண்டு. அவற்றை பார்ப்போம்.

சிவப்பு ரோஜாவை காதலை நேரடியாக வெளிப்படுத்த கொடுக்கலாம்.

மஞ்சள் நிற ரோஜா நட்பை வெளிகாட்ட கொடுக்கப்படுகிறது.

பிங் நிற ரோஜாவை கொடுத்தால் ஈர்ப்பு அல்லது வசீகரம் இருப்பதாக அர்த்தம்.

ஊடலை சமாதானம் செய்ய வெள்ளை ரோஜா கொடுக்கலாம்.

முதல் பார்வையிலேயே காதல் வந்ததை குறிக்க ஊதா நிற ரோஜா கொடுக்கலாம்.