தகிக்கிறது கோடை வெப்பம் : தப்பிக்க சில டிப்ஸ்!!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், டிஹைட்ரேஷன், சிறுநீர் தொற்று, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றை தவிர்க்க என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என இந்த பதிவில் பார்க்கலாம்.
வெப்பம் அதிகமுள்ள காலங்களில் வியர்வை மற்றும் சிறுநீர் வராமலும் அல்லது அளவுக்கதிகமாக வெளியேறுவதால் சிலருக்கு உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
அதைத் தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
பலருக்கு வெயிலால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற வயிறு தொடர்புள்ள பிரச்னைகள் வரும்.
இவற்றை சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச் சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
உடல் சூட்டை தணிக்க காலை, இரவு என இரண்டு வேளையும் கட்டாயம் குளிக்கவேண்டும்.
பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது.