மாதவிடாய் வலியால் அவதியா… சாக்லேட் சாப்பிடுங்க!
மாதவிடாய் சமயத்தில் அடி வயிறு வலி வந்தால், உடல் ஆரோக்கியத்தில், சற்று அக்கறை எடுத்து பராமரித்து வந்தாலே, வரும் காலத்தில் பல பிரச்னையை தவிர்க்கலாம்.
வலி, மற்றும் சோர்வில் இருந்து நிவாரணம் பெற, அந்த 3 - 5 நாட்களில் சில உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.
டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீஷியம் உள்ளது. இது நமது தசைகளை ரிலாக்ஸ் செய்து வலியை நீக்கும்.
மேலும் சாக்லேட்டில் உள்ள செரட்டோனின் என்ற வேதி பொருள் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் கோபம், டென்ஷன், பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவும்.
சியா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது இயற்கையாகவே வீக்கத்திற்கு எதிராக நல்ல பலன் தரும். மேலும் வலியை கட்டுப்படுத்தும்.
இஞ்சியில் வலியை நீக்கும் பண்புகள் அதிகம் உள்ளது. மாதவிடாய் காலங்களில் இஞ்சில் சாறு எடுத்து குடித்து வந்தால் வலி நிவாரணியாக செயல்படும்.
மதிய உணவாக தயிர் சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் , வலி அடங்கும்.
மாதுளை, பீட் ரூட் அல்லது திராட்சை ஜூஸ் குடிக்கலாம். சோர்வு இல்லாமல் இருக்கும்.
அந்த சமயங்களில் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். வெந்நீராகவும் எடுத்து கொள்ளலாம். வயிற்று வலியை குறைக்கும்.