குழந்தைகளுக்கு எலும்பு முறிவா...அச்சம் வேண்டாம்!
குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த இரண்டு பாகங்களை சரியாகப் பொருத்தி, அசையாமல் கட்டுப் போட்டாலே போதுமானது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
உடைந்த பகுதியில் திசுக்கள், எலும்பு மஜ்ஜையில் உள்ள மூல (ஸ்டெம்) செல்கள், நோய் எதிர்ப்பு சக்தியின் கட்டளைக்கு ஏற்ப, உடைந்த இடத்தில் வந்து புதிய செல்கள் உற்பத்தி செய்யத் துாண்டுகிறது.
உடைந்த இரு முனைகளிலும், புதிய எலும்பு வளர்வதற்கும், குருத்தெலும்பு வளர்வதற்கும் இது உதவுகிறது.
குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்காமல், நன்றாக ஓடியாடி, விளையாட அனுமதிக்க வேண்டும்.
இரண்டு அடி உயரத்தில் இருந்த குதித்து விளையாட வேண்டும். கால்ஷியம் தாதுவால் ஆன எலும்புகள் வலிமையாக வளர்வதற்கு குதித்து விளையாடுவது உதவும்.
ஜிம்னாஸ்டிக், யோகா போன்று, உடலை நன்றாக வளைத்து செய்யும் பயிற்சி, எலும்புகளின் வலிமைக்கும், வளையும் தன்மைக்கும் உதவும்.
இது போன்ற பயிற்சிகளை, குழந்தைப் பருவத்தில் இருந்தே செய்யும் போது, கீழே விழுந்தாலும் ஒன்றும் ஆகாது.
பயிற்சி செய்ய செய்ய, எதிர்பாராமல் நடக்கும் விஷயத்தையும் எதிர்கொள்ளும் தன்மை, கவனம் வந்து விடும்.