சிம் இல்லாமல் 2027 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்படாது... யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை அகற்றினால் டெலிகிராம், வாட்ஸ்அப் செயலிகள் வேலை செய்யாது.

இணைய மோசடி, சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் 'வை பை' வசதியுடன் செயலிகளை பயன்படுத்துவதை தடுக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பலர் தங்களது பழைய போன்களில் சிம் கார்டை கழற்றிவிட்டு, வெறும் வை பை இணைப்பை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமை இயக்கி வருவார்கள்.

இனிமேல் சிம் கார்டு சாதனத்தில் இல்லாவிட்டால், ஆப் தானாகவே முடக்கப்படும். எனவே, சிம் கார்டு இருக்க வேண்டியது கட்டாயம்.

முதன்மை போனில் சிம் கார்டை வைத்துக்கொண்டு, மற்றொரு போனில் அதே எண்ணைக் கொண்டு வாட்ஸ்அப் லாகின் செய்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டுக்கு செல்லும்போதோ, உள்ளூரில் அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றியோ பயன்படுத்துபவர்கள், பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை போனிலிருந்து அகற்றினால் ஆப் வேலை செய்யாது.

வாட்ஸ்அப் கணக்கைத் துவக்குவதற்காக ஒரு எண்ணைப் பயன்படுத்திவிட்டு, பின் அதற்கு ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டை செயலிழக்க செய்திருந்தால் அக்கணக்குகள் முடக்கப்படும்.

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் நீண்ட நேரம் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி லாக் அவுட் செய்யப்படுவார்கள்.

மீண்டும் லாகின் செய்ய சிம் கார்டு இருக்கும் போனிலிருந்து க்யூஆர் கோடை, ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும்.

மத்திய அரசின் இந்த உத்தரவு வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை, ஜியோசாட், ஷேர்சாட் போன்ற மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்....

அனைத்து முக்கிய குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடக செயலிகளுக்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல் வை பை மூலம் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்களே புதிய மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

'மோசடி செய்பவர்கள் இந்திய எண்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கடினமாக்கும்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.