ஜென்சீ பெண்களின் ஒனப்பத்தட்டு பேஷன்...
ஒரு காலத்தில் பாட்டிகள் காது பூராவும் லோலாக்கு, ஒனப்புத்தட்டு, கோப்பு, எடத்தட்டு, முறுக்கு குச்சி என விதம் விதமான ஆபரணங்களை அணிந்திருந்தார்கள்.
இப்போது பெண்களுக்கான காது குத்தும் பேஷன் காதின் பல்வேறு பகுதிகளில் மல்டிபிள் பியர்சிங் (Multiple Piercings) செய்யும் நவீன நாகரிகமாக மாறியுள்ளது.
குறிப்பாக ஜென்சீ பெண்கள் அதை மீண்டும் பேஷனாக்கி விட்டார்கள்.
காதின் மேல் பகுதி, ஓரம், உள் பகுதி என ஒவ்வொரு இடத்திலும் வளையம், கல் பதித்த கம்மல் அணிவது டிரெண்டாக உள்ளது.
வலைதளங்களில் வைரலாகி வரும் 'சைடு பியர்சிங்' போட்டோ, வீடியோ பெண்களின் கவனத்தை ஈர்த்து விதவிதமான கம்மல்களை அணிய வைத்துவிட்டது.
'ஒத்த ரூவாயும் தாரேன்... ஒரு ஒனப்பத்தட்டும் தாரேன்' என்ற பாடல் வரிகள் இந்த டிரெண்டிற்கு பொருத்தமாக உள்ளது.
ஆனால் ஜென்சீக்கள் விவரமானவர்கள். பாட்டிகள் போல கனமான அணிகலன்களை அணிந்து காதை தொங்க விடாமல், மினிமல் தோடுகளை அணிந்து ஏஸ்தடிக் லுக் தருகின்றனர்.
காது குத்திய பின்பு, தொற்று ஏற்படாமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.