பார்வையை பறித்துவிடும் கிளாக்கோமா.. அறிகுறிகள் அறிவோமா...

கிளாக்கோமா என்பது கண் நீர் அழுத்த நோயாகும். இது, கண்களின் பக்கவாட்டு பார்வையை குறுக்கி விடுகிறது. 60-70 சதவீத கண் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்யும்.

மங்கலான பார்வையை அலட்சியப்படுத்தினால், பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, கண் டாக்டர்கள் கூறுகின்றனர்.

40 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிளாக்கோமா பாதிப்புக்கு, ஆரம்ப கால அறிகுறி இருக்காது.

கிளாக்கோமா பாதிப்பு ஏற்பட்டவர்களால், பக்கவாட்டில் இருப்பதை பார்க்க முடியாது.

நடக்கும் போதே சுவர்களில் மோதுவது, இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாமல் தடுமாறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும் அலட்சியமாக இருக்கக்கூடாது.

40 வயதுக்கு மேற்பட்டோர், ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வோர், குடும்பத்தில் யாருக்கேனும் கிளாக்கோமா பாதிப்பு இருந்தால் மற்றவர்களும் கண் பரிசோதனை செய்வது அவசியம்.

சொட்டு மருந்துகள், அறுவை சிகிச்சையால் இப்பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இழந்த பார்வையை மீட்க முடியாது என்பதால், அலட்சியமாக இருக்க வேண்டாம்.

பிறந்த குழந்தைகளுக்கும் கிளாக்கோமா பாதிப்பு ஏற்படலாம். கண் பெரிதாக வீங்கியிருத்தல், கருவிழி மங்கலாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகள்.