தாம்பத்திய உறவைத் தள்ளிப் போடுவதாலும் நன்மை உண்டு...!
அன்றாட வாழ்வில் பலவித காரணங்களுக்காக சில தம்பதியர், தாம்பத்திய உறவைத் தள்ளிப்போட முடிவு செய்கிறார்கள். வயது கடந்துவிட்ட பலரோ அதை சலிப்பான செயலாக எண்ணுகிறார்கள்.
இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு பல நன்மைகளை அளிக்கிறது. அதேசமயம், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் நீண்டநாட்கள் தள்ளிப்போடுவதிலும் சில நன்மைகள் இருப்பதாக, பாலியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருசில தம்பதிகள் உடல்நிலை மற்றும் வேறு காரணங்களுக்காக கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப்போட நினைக்கிறார்கள். இதற்காக பல கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
இவையனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும் என நாம் நம்பிவிட முடியாது. அடிக்கடி கரு உருவாவதைத் தடுக்க, தாம்பத்திய உறவைத் தள்ளிப்போடுவதும் ஆரோக்கியமான வழியாகும்.
இயற்கையாகவே, தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றின் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றும் குறையும்.
தேவையில்லாத சிந்தனைகளால் தாம்பத்திய உறவில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது கடினமானது. அதே சமயம் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் துவங்க நினைக்கும்போது இன்னும் மகிழ்ச்சிகரமானதாக அது மாறும்.
அதேவேளையில் பல ஆண்டுகளாக உறவைத் தள்ளிப்போட நினைப்பதும் தவறு. தம்பதிகளில் ஒருவருக்கு ஆர்வமாக இருப்பினும், மற்றவருக்கு ஏமாற்றம் தரும்; அவர் தனிமையில் இருப்பது போன்று உணரலாம்.
எனவே, போதுமான இடைவெளியில் தாம்பத்திய உறவு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் துணையுடன் வெளிப்படையாக அதனைத் தெரிவித்து, இல்லற இன்பத்தில் ஈடுபடுவதும் அவசியம்.