குழந்தைகளுக்கு ஒழுக்கம், கீழ்படிதல் போன்றவற்றை பள்ளிக்கு செல்லும் முன் சொல்லிக் கொடுப்பது போல் அவர்களின் பாதுக்காப்பு கருதி குட் டச், பேட் டச் பற்றி சொல்லி கொடுப்பதும் மிகவும் அவசியமாகும்.

பொதுவாக குழந்தைகளுக்கு புதிய நபர்கள் தவறாக பார்த்தாலும், தவறாக தொட்டாலும் நிச்சயம் அச்சம் கலந்த அருவருப்பை தரும். பெற்றோர்கள் அதனால் குழந்தை குட் டச், பேட் டச் பற்றி கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் மழலை வகுப்புக்கு செல்லும் போதே இதை துவங்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நினைவூட்டலாம்.

நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் கூட குழந்தைகளின் பின் பக்கங்களை தொடுவது, தட்டுவது ஒரு பேட் டச் என சொல்லிக் கொடுக்கலாம்.

எந்த நபரும் குழந்தைகளின் உதட்டில் முத்தமிடுவது பேட் டச் தான். பெற்றோரை தவிர பிறர் எந்த வகையிலும் முத்தம் தருவதை தவிர்க்க அறிவுறுத்தவும்

ஹக் என்ற பேரில இறுக்கமாக கட்டிப்பிடிக்கும் போதும், ஒரு பகுதியை அழுத்த முயற்சித்தலும் கூட பேட் டச் தான்.

கண்டிப்பாக அந்தரங்க உறுப்புகளை யார் தொட முயன்றாலும், அதை பள்ளி ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க குழந்தைகளை அறிவுறுத்தவும்.

குழந்தைகளுக்கு பிடிக்காத அல்லது புரியாத வகையில் அவர்களின் உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கற்றுத்தர வேண்டும். பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளிடம் தினசரி நடவடிக்கைகளை விசாரிப்பதும் மிகவும் நல்லது.